Monday, July 22, 2013

Border Security Force Constable Recruitment 2013 July Updates (எல்லைப் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் பணியிடங்கள் )

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்
இடையே 1965ல் போர் மூண்ட போதுதான் இந்தியாவின் எல்லைகளைக் காப்பதற்கு என்ற பிரத்யேகப் படை தேவை என்ற உண்மை உணரப்பட்டது. இதன் விளைவாக 1965ல் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் பி.எஸ்.எப்., படை நிறுவப்பட்டது. தற்சமயம் இந்த படை இந்திய தேசத்தின் எல்லைகளைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த படையில் விளையாட்டுத் துறை சார்ந்த வீரர்களுக்கான பிரத்யேக பணி நியமனமாக 90 கான்ஸ்டபிள் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
பிரிவுகளும் காலி இடங்களும்: பி.எஸ்.எப்.,பில் தனி நபர் திறன் சார்ந்த விளையாட்டுப் பிரிவில் 62 காலி இடங்களும், குழுவாக விளையாடும் விளையாட்டுகளில் 28 காலி இடங்களும் சேர்த்து மொத்தம் 90 காலி இடங்கள் உள்ளன. தனி நபர் விளையாட்டுகளில் ஆர்ச்சரி, அதலடிக், ஸ்விம்மிங், பாக்ஸிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஜூடோ, ரோயிங், வெயிட் லிப்டிங், ரெஸ்ட்லிங், ஈக்வஸ்டேரியன், ஷூட்டிங் போன்றவையும், குழு விளையாடுகளில் பாஸ்கட்பால், புட்பால், ஹேண்ட்பால், ஹாக்கி, கபாடி, வாலிபால் போன்றவையும் அடங்கும்.
தேவைகள்: எல்லைப் பாதுகாப்புப் படையின் மேற்கண்ட கான்ஸ்டபிள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது நிரம்பியவராகவும், 23 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். இந்தியாவின் எந்த பகுதியிலும் பணி புரியத் தயாரான நிலையில் இருக்க வேண்டும். தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளில் மேற்கண்ட விளையாட்டுகளில் பங்கெடுத்தவராக இருக்க வேண்டும். இண்டர்-யுனிவர்சிடி அல்லது இண்டர்-ஸ்கூல் போட்டிகளில் பங்கு பெற்றவராக இருக்க வேண்டும். முழுமையான விபரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் சில குறைந்த பட்சம் உடல் தகுதிகளும் கட்டாயம் தேவைபடுகின்றது. உயரம் குறைந்த பட்சம் 170 செ.மி.,யும் இதற்கு நிகரான எடையும் பெற்றிருக்க வேண்டும். சிறந்த கண் பார்வையும், நல்ல உடல் நிலையும் கட்டாயம் தேவை.
இதர தகவல்கள் : பி.எஸ்.எப்.,பின் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் உயரம்/எடை தேர்வு, ஐடெண்டிடி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, பிஸிக்கல் ஸ்டாண்டர்டு தேர்வு, தொடர்புடைய விளையாட்டில் தேர்வு, மருத்துவ சோதனை என்ற பல்வேறு நிலைகளிலான தேர்ச்சி முறையை எதிர்கொள்ள வேண்டும். முழுமையான தகவல்கள் அடங்கிய பயோ-டேடா மற்றும் உரிய சான்றிதழ் இணைப்புகளைப் பின்வரும் முகவரிக்கு அனுப்பவும்.
முகவரி:
OIC(Sports) Chawla,
C/O 25 Bn BSF, Chhawla Camp,
Post Office Chhawla,
New Delhi - 110071
விண்ணப்பிக்க இறுதி நாள் : 04.08.2013
இணையதள முகவரி: http://bsf.nic.in/doc/recruitment/r50.pdf



TAGS: Border Security Force Constable Recruitment 2013 July Updates, dinamalar employment nes, dinamalar kalvi malar news 2014, dinamalar velaivaippu news, dinathanthi news about TNPSC notification 2012, latest dinamalar employment news updates, tnpsc news from dinathanthi, 

No comments:

Post a Comment

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in