Sunday, July 14, 2013

Agricultural officials in South Indian Bank Recruitment 2013 - சவுத் இந்தியன் வங்கியில் விவசாய அதிகாரிகள்

சுதந்திரப் போராட்ட காலத்தில் சுதேசி இயக்கம் நடைபெற்று வந்த போது கேரள மாநிலம் திருச்சூரில் இந்த வங்கி நிறுவப்பட்டது. தற்போது தனியார் துறையைச் சார்ந்த ஒரு ஷெட்யூல்டு வங்கியாக லாபகரமாக இயங்கி வருகிறது. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளதுடன் நவீனமய சேவைகள், சிறந்த வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றிற்காகவும் இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் உள்ள புரொபேஷனரி அதிகாரி பிரிவைச் சார்ந்த 25 விவசாய அதிகாரிகள் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள்: சவுத் இந்தியன் வங்கியின் அக்ரிகல்சுரல் ஆபிசர் பதவிக்கு

Nuclear Power Corporation Recruitment 2013 - நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷனில் டெக்னிகல் காலி இடங்கள்

இந்திய அரசின் அணுசக்தித் துறையின் கீழ் இயங்கும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். மின் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிறுவனம் 1987ல் நிறுவப்பட்டது. இந்த நிறுவனத்தின் குஜராத் கிளையில் ஸ்டைபண்டரி டிரெய்னி பிரிவில் உள்ள பல்வேறு காலி இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகளும் காலி இடங்களும்: என்.பி.சி.ஐ.எல்., நிறுவனத்தின் ஸ்டைபண்டரி காலி இடங்கள் டிப்ளமோ ஹோல்டர், பி.எஸ்.சி., ஹோல்டர், பிளாண்ட் ஆபரேட்டர், பிட்டர் - மெஷின்ஸ்ட் என்ற நான்கு பிரிவுகளின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இவற்றில் முதல் பிரிவில் 21 இடங்களும், இரண்டாவது பிரிவில் 21 இடங்களும், பிளாண்ட் ஆபரேட்டர் பிரிவில் 45 இடங்களும், மெஷினிஸ்ட் பிரிவில் 49 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

UPSC ASSISTANT COMMANDANT RECRUITMENT 2013 - யு.பி.எஸ்.சி.,யின் துணை கமாண்டண்ட் தேர்வு அறிவிப்பு

இந்தியாவின் மத்திய அரசுப் பணி இடங்களையும், முக்கிய பணி இடங்களையும் நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு பிரசித்தி பெற்றது. இந்த அமைப்பின் சார்பாக பி.எஸ்.எப்., சி.ஆர்.பி.எப்., சி.ஐ.எஸ்.எப்., ஐ.டி.பி.பி., ஆகிய படைகளில் மொத்தம் 424 துணை கமாண்டண்டுகளைப் பணி நியமனம் செய்வதற்கான 2013 ஆண்டுக்கான சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்ஸ் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. 
பிரிவு வாரியான காலி இடங்கள்: யு.பி.எஸ்.சி, அமைப்பு நடத்தும் துணை கமாண்டண்ட் தேர்வு மூலமாக பார்டர் செக்யூரிட்டி போர்ஸில் (பி.எஸ்.எப்.,) 110 இடங்களும், மத்திய ரிசர்வ் போலீஸ் போர்ஸில்(சி.ஆர்.பி.எப்.,) 138 இடங்களும், சென்ட்ரல் இன்டஸ்ட்ரியல் செக்யூரிட்டி போர்ஸில் (சி.ஐ.எஸ்.எப்.,) 56 இடங்களும், இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையில் (ஐ.டி.பி.பி.,) 120 இடங்களும் சேர்த்து மொத்தம் 424 அஸிஸ்டெண்ட் கமாண்டண்ட் காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
தேவைகள் என்னென்ன: இந்தக் காலி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.08.2013 அன்று 22 வயது நிரம்பியவராகவும், 25 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும். ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு இறுதித் தேர்வை எதிர்கொள்பவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தப் பதவிகள் பாதுகாப்புப் பணி தொடர்புடையவை என்பதால் சில குறைந்த பட்ச உடல் தகுதிகளும் தேவைப்படும் என்பதை நினைவில் வைக்கவும்.

Coast Guard recruitment 2013 - கடலோரக் காவல் படையில் காலி இடங்கள்

இந்தியா சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாக 3 ராணுவ படைகள் மட்டுமே பெரும்பான்மையான பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தன. ஆனால் 1977ல் இந்தியாவின் கடலோர எல்லைகளையும் பாதுகாப்பதன் அவசியம் உணரப்பட்டதன் விளைவாக இந்திய கடலோரக் காவல் படை எனப்படும் கோஸ்ட் கார்டு படை நிறுவப்பட்டது. இந்தியாவின் கடல் எல்லைகளைப் பாதுகாப்பது, நீர் தொடர்பான நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டு செயல்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போன்ற முக்கிய பணிகளில் இந்தப் படை ஈடுபடுகிறது. இந்தப் படையில் டெக்னிகல் பிரிவிலான யந்திரிக் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேவைகள்: யாந்திரிக் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது

டி.இ.டி அறிவுக்கான அரங்கம்: குழந்தை மேம்பாடு மற்றும் கற்பித்தல் முறைகள் தாள் - II PART I

TAMILNADU TET ANSWER KEYS WITH DISCUSSION
ஸ்கின்னரின் கற்றல் கட்டுப்பாடுகள்
* கற்பவரின் செயலை வலுப்படுத்திட ஒரு தூண்டல் இருத்தல் வேண்டும்.
* கற்பவர் செயலை வெளிப்படுத்தியவுடன் அத்தூண்டல் வழங்கப்படுதல் வேண்டும்.
* செயல் வெளிப்பட்டு ஒவ்வொரு முறையும், அத்தூண்டல் தொடர்ந்து பலமுறை வழங்கப்படுதல் வேண்டும்.
உட்காட்சி வழிக் கற்றல் - Learning by Insight
* முதன்முதலில் வெளியிட்டவர் - கோஃஹலர்
* இவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர்.
* கெஸ்டால்ட் எனும் உளவியல் பிரிவைச் சேர்ந்தவர்.
* சுல்தான் எனும் மனிதக் குரங்கை வைத்து சோதனை செய்தார்.
* கற்றல் என்பது வலுவூட்டும் தூண்டலால் நிகழும் நடத்தை அல்ல என்பதை கோஃஹலரின் கருத்தாகும்.
* பிரச்சனைக்குரிய தீர்வு திடீரென சில உண்மைகளின் புலன் காட்சின் அடிப்படையில் தோன்றுவது. கோஃஹலரின் உட்காட்சி எனப்படும்.
* இதன் அடிப்படையில் அமைவது மனிதக் கற்ரலும், விலங்குக் கற்றலும் ஆகும்.
* கூண்டில் உள்ள பெட்டிகளை உட்காட்சி மூலம் அடுக்கியும், குச்சிகளை இணைத்தும் வாழைப்பழத்தை சுல்தான் என்னும் குரங்கு எடுத்தது.
உட்காட்சி கற்றலை பாதிக்கும் காரணிகள்
1.கற்பவரின் நுண்ணறிவு
2.முன் அனுபவங்கள்
3.பிரச்சனை தோன்றும் முறை
4.ஆரம்ப முயற்சி
கற்றல் மாற்றம் (அ) பயிற்சி மாற்றம் - Transfer of Learning
* முன்பு கற்ற ஒன்று தற்போது ஒன்றினில் மாற்றத்தை ஏற்படுத்துவது கற்றல் மாற்றம் எனப்படும்.
* முன்பு கற்றலைத் தற்போது கற்றுக் கொளவதிலும், தற்போது கற்கின்ற ஒன்று முன்பு கற்றதிலும் சில விளைவுகளை ஏற்படுத்துவது கற்றல் விளைவு எனப்படும்.
* ஒரு கற்றல் நிகழ்வில் பெறப்பட்ட அறிவு, செயல்திறன், பழக்க வழக்கங்கள், மனப்பான்மை போன்ற எந்த அளவைக் கூறும் வேறொரு கற்றல் நிகழ்வுக்கு எடுத்துச் * செல்லப்பட்டு தாக்கத்தை ஏற்படுத்துவதே கற்றல் மாற்றம் எனப்படும்.
* கற்றல் மாற்றத்தின் வகைகள் - Types of Transfer of Learning
கற்றல் மாற்றம் 3 வகைப்படும்.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in