Wednesday, August 14, 2013

BORDER SECURITY FORCE RECRUITMENT - LAST DATE : 02.09.2013 (எல்லைப் பாதுகாப்புப் படையில் காலியிடங்கள்)

இந்தியாவின் அண்டை மாநிலங்களின் எல்லைப் பகுதியைப் பாதுகாப்பதில் எல்லைப் பாதுகாப்புப் படை எனப்படும் பார்டர் செக்யூரிடி போர்ஸ் பிரதானமானது. இந்தப் படை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே எல்லைப் பகுதியில் ஊடுருவல் நிலவியதன் விளைவாகவே அதனைத் தவிர்ப்பற்காக நிறுவப்பட்டது. தற்போது பல ஆண்டுகளாக மிகச் சிறந்த முறையில் இயங்கிவரும் இந்தப் படையில் துணை ஆய்வாளர் மற்றும் தலைமைக் காவலர் பதவியில் உள்ள 247 டெக்னிகல் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகளும் காலி இடங்களும் : பி.எஸ்.எப்.,பின் சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் மரைன் பிரிவில் எஸ்.ஐ.,-மாஸ்டர் பிரிவில் 13 இடங்களும், எஸ்.ஐ.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 13 இடங்களும், எச்.சி.,-மாஸ்டர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.,-இன்ஜின் டிரைவர் பிரிவில் 64 இடங்களும், எச்.சி.-ஒர்க்-ஷாப் பிரிவில் டீஸல் மெக்கானிக்கில் 3, கார்பெண்டரில் 5, மெஷின்ஸ்டில் 1, ஏ.சி., டெக்னீசியனில் 4, எலக்ட்ரீசியனில் 1, அப்-ஹோல்ஸ்டரில் 1, சி.டி., க்ரூவில் 80 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

IFFCO Recruitment Last Date : 15th August 2013 (இப்கோ நிறுவனத்தில் நிதி நிர்வாக பயிற்சியாளர்கள்)

இந்தியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோ-ஆபரேடிவ் லிமிடெட் என்ற இப்கோ நிறுவனம் 1967ல் பல்வேறு யூனிட்டுகளைக் கொண்ட கூட்டுறவு அமைப்பாக நிறுவப்பட்டது. உரங்களை தயாரிப்பது மற்றும் அவற்றை பல இடங்களுக்கும் அனுப்பி விற்பனை செய்வதை முதன்மையாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகிறது. ஒரு கூட்டுறவு கழகமாக இயங்கி வரும் இந்த நிறுவனத்தில் பினான்சியல் மேனேஜ்மெண்ட் டிரெய்னி (எப்.எம்.டி.,) பிரிவிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: இப்கோ நிறுவனத்தின் நிதி நிர்வாகப் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.2013 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சார்டர்டு அக்கவுண்டண்ட் (சி.ஏ.,) படிப்பை முடித்திருக்க வேண்டும்.

SSC Recruitment 2013 August Updates - Last Date : 30.08.2013 (ஸ்டாப் செலக்சன் கமிஷன் அறிவித்துள்ள மொழிபெயர்ப்பாளர் பதவிகள்)

மத்திய அரசின் பணி இடங்களை ஸ்டாப் செலக்சன் கமிஷன் எனப்படும் எஸ்.எஸ்.சி., அமைப்பு தேர்வுகளை நடத்தி காலிப் பணி இடங்களை நிரப்பி வருகிறது. எஸ்.எஸ்.சி., தற்போது ஜூனியர் டிரான்ஸ்லேட்டர் (சி.எஸ்.எல்.ஓ.,) பதவிக்கான எழுத்துத் தேர்வை அறிவித்துள்ளது. 
தேவைகள்: எஸ்.எஸ்.சி., அறிவித்துள்ள பொது எழுத்துத் தேர்வை எதிர்கொள்ள விரும்புபவர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் முதுநிலைப் பட்டப் படிப்புக்கு நிகரான படிப்பில் ஆங்கிலம் அல்லது இந்தியை ஒரு பாடமாகவோ, அல்லது இதே அளவிலான படிப்பை இந்தி அல்லது ஆங்கில மொழி வாயிலாகவோ, அல்லது இதே அளவிலான படிப்பில் இந்தி அல்லது ஆங்கிலத்தை ஒரு விருப்பப் பாடமாகவோ படித்திருக்க வேண்டும்.
இதனுடன் இந்தியிலிருந்து ஆங்கிலம் அல்லது ஆங்கிலத்திலிருந்து இந்திக்கு மொழி மாற்றம் செய்யும் சான்றிதழ் படிப்பு, மற்றும் இந்த துறையில் இரண்டு வருட பணி அனுபவம் தேவைப்படும். எழுத்துத் தேர்வு மூலமாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வை தமிழ் நாட்டில் சென்னையில் எதிர்கொண்டு வெற்றிகரமாக தேர்ச்சி பெற வேண்டும்.

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in