Monday, September 9, 2013

Indian Army nursing recruitment 2013 - நர்சிங் படிப்புடன் பணிவாய்ப்பு


நமது தரைப்படையின் பல பிரிவுகளில் நர்சாகப் பணியாற்றும் வாய்ப்பை தரைப்படை படிப்புடன் கூடியதாக அறிவித்துள்ளது. இந்த வாய்ப்புக்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். கேரளாவில் இதற்கான படிப்பு தரைப்படையால் நடத்தப்படும். பின்பு பணி வாய்ப்பு அளிக்கப்படும்

Repco Home Finance Limited Recruitment 2013 last date : September/16/2013 - ரெப்கோ வீட்டுவசதி நிறுவன வாய்ப்புகள்


பரவலாக அறியப்படும் ரெப்கோ வங்கியின் துணை நிறுவனமான ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள கிராஜூவேட் டிரெய்னி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் இந்த காலியிடங்கள் உள்ளன. 
தகுதி: பி.காம்., அல்லது பட்டப்படிப்பு ஒன்றில்தேர்ச்சி

DIRECTORATE OF ADVERTISING AND VISUAL PUBLICITY - 1578 காலியிடங்கள்

 மத்திய அரசு வேலை வேண்டும் என்று ஏங்கிடும் இளைஞர்கள் எண்ணற்றோர் உண்டு. ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆயுதத் தொழிற்சாலையில் காலியாகவுள்ள 1578 காலியிடங்களுக்கு போட்டியிட விரும்புவோருக்கான வாய்ப்பை இந்த தொழிற்சாலை அறிவித்துள்ளது. இது குறித்த தகவல்கள் இதோ

துறை வாரியாக காலியிடங்கள்:

How to Join Indian Army ?- துணை ராணுவப் பணியில் எப்படி சேரலாம்

 ஒரு நாட்டுக்கும் அந்நாட்டின் மக்களுக்குமான சேவை புரியும் பணியே மிக நல்ல பணி என்று கருதப்படுகிறது. இது மாதிரியான சேவை புரிய நாட்டின் பாதுகாப்புப் படை, காவல் துறை ஆகியவற்றுடன் மத்தியக் காவல் படை அல்லது துணை ராணுவப் படை, இந்திய கரையோரப் படையும் மிக நல்ல பணித் துறைகளாகக் கருதப்படுகிறது. ஆனால் இந்தப் பணிகளில் வாழ்க்கையே பணயம் வைக்கும் சவால்களும் உண்டு. நாடு தழுவிய அளவில் இப்பணிகள் இருப்பதால் பல்வேறுபட்ட மனிதர்கள், கலாசார மாண்புகள் போன்றவற்றை அறியும் வாய்ப்புகள் உள்ளன. 
மத்தியக் காவல் படையைப் பொறுத்தவரை மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி. எப்.,), கரையோரக் காவல் படை(பி.எஸ்.எப்.,), மத்திய நிறுவனப் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.,), இந்தோ-திபெத்திய எல்லையோரக் காவல் (ஐ.டி.பி.பி.,), தற்போது 'சகஸ்ட்ர சர்விஸ் பீரோ" என்று வழங்கப்படும் ஸ்பெஷல் சர்விஸ் பீரோ ஆகியவை அடங்கும்.
முப்படைகளின் கூட்டாக செயல்படுவதுதான் இந்திய எல்லைக் காவல் படையின் பணியாகும். இது இந்தியக் கடற்படை மற்றும் இந்திய கஸ்டம்ஸ் அமைப்புகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றுகிறது. கடல், நதித் துவாரங்கள் மற்றும் சீனாவின் எல்லையில் உள்ள காஷ்மீரின் நதிகள் ஆகிய பகுதிகளை இது தீவீரமாக கண்காணிக்கின்றது.

அரசுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் கிளரிகல் நேர்முகத் தேர்வு

பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் கிளரிகல் எனப்படும் அசிஸ்டன்ட் பணியிடங்களுக்கான தேர்வு அகில இந்திய அளவில் ஜூலை 14 மற்றும் 21ம் தேதிகளில் இந்தியா முழுவதும் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்பட்ட இந்தத் தேர்வில் பல லட்சம் பேர் கலந்து கொண்டனர்.
பொதுவாக வங்கித் தேர்வுகளை விட கடினமானதாக உணரப்பட்ட இந்தத் தேர்வின் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. 1க்கு 4 என்ற விகிதத்தில் காலியிடங்களுக்கேற்ப நேர்முகத் தேர்வுக்கு போட்டியாளர்கள் அழைக்கப்படவுள்ளனர். மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தத் தேர்வின் முடிவு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இதற்கு எப்படித் தயாராவது என்ற பரபரப்பு போட்டியாளர்களிடம் காணப்படுகிறது. 

INDIA GOVT JOBS CURRENT UPDATES 2023-2024

Welcome Website of Tamilnadu Government Jobs

TAMIL NADU POLICE RECRUITMENT 2017 UPDATES

.
NAME OF RECRUITMENTCONDUCTED BYFOR DETAILS CLICK
CIVIL SERVICEUPSCwww.upsc.gov.in
TPS (DSP)TNPSCwww.tnpsc.gov.in